< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
கலவையில் குத்துச்சண்டை போட்டி
|7 Aug 2022 10:09 PM IST
கலவையில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் வாழைப்பந்தல் சாலையில் உள்ள குத்துச்சண்டை பயிற்சி பள்ளியில் 80 மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இதில் பயிற்சி பெற்ற குத்துச்சண்டை வீரர்கள் சமீபத்தில் பஞ்சாப், அரியானா போன்ற இடங்களில் நடந்த போட்டியில் கலந்துகொண்டனர். மேலும் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தன்று வாலாஜா மேல்நிலைப்பள்ளியில் குத்துச்சண்டை போட்டி நடைபெற உள்ளது
அதை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று கலவையில் குத்துச்சண்டை போட்டியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அப்போது அப்துல் அக்கீம் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ராஜா, பயிற்சி மாஸ்டர் கிருஷ்ணன், ரகு, கலவை தாசில்தார் ஷமீம், வருவாய் ஆய்வாளர் வீரராகவன் ஆகியோர் உடன் இருந்தனர்.