< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்கு சீல்
|4 Oct 2022 12:15 AM IST
கண்டாச்சிபுரம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்கு சீல்
திருக்கோவிலூர்
கண்டாச்சிபுரம் அருகே உள்ள ஒடுவன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி கவுரி(வயது 47). ரகசிய தகவலின் பேரில் இவரது பெட்டிக்கடையை கண்டாச்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருது தலைமையிலான போலீசார் சோதனை செய்தபோது கடையில் 500 புகையிலை பாக்கெட்டுகள் இருந்ததை கண்டு பிடித்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வருவாய்த் துறையினர் பெட்டிகடைக்கு சீல் வைத்தனர்.