< Back
மாநில செய்திகள்
கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட தமிழ்ச்சங்கத்தினர்
சிவகங்கை
மாநில செய்திகள்

கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட தமிழ்ச்சங்கத்தினர்

தினத்தந்தி
|
26 March 2023 12:15 AM IST

கீழடி அருங்காட்சியகத்தை தமிழ்ச்சங்கத்தினர் பார்வையிட்டனர்.


சிவகங்கையில் தமிழ் சங்கம் இலக்கியம் சார்ந்த செயல்பாடுகளை மாதம்தோறும் தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் எழுத்தாளர்களை பாராட்டுவது, நூல்களை வாசித்து விமர்சனக் கூட்டம் நடத்துவது, புதிய இலக்கியம் சார்ந்த நூல்களை வெளியிடுவது, போன்ற இலக்கிய நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. இதில் தீரா உலா நிகழ்வாக வரலாற்று இடங்களை பார்வையிடுவதை சங்கத்தின் கொள்கை முடிவில் ஒன்றாக வைத்துள்ளது. அவ்வகையில் இம்மாதம் தீரா விழா நிகழ்வாக தமிழர்களின் பண்பாட்டு தாய்மொழியாய் விளங்குகிற கீழடி அருங்காட்சியகத்தை சிவகங்கை தமிழ்ச்சங்கத்தினர் குடும்பமாக சென்று வியந்து கண்டு களித்தனர். இதில் சிவகங்கை தமிழ் சங்க நிறுவனத் தலைவர் ஜவகர், தலைவர் தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன், பொருளாளர் காசி. ராமமூர்த்தி, முன்னாள் செயலர் முத்துப்பாண்டியன், சிவகங்கை தொல் நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா உள்ளிட்ட 60 பேர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்