< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

"விரைவில் ஆவின் தண்ணீர் பாட்டில்" - அமைச்சர் நாசர் அறிவிப்பு

தினத்தந்தி
|
3 Aug 2022 1:16 PM IST

ஆவின் நிறுவனம் மூலம் குடிநீர் பாட்டில் தயாரிக்க திட்டமிட்டு உள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்து உள்ளார்.

சென்னை

பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியதாவது;-

ஆவின் பால் தயாரிக்கும் 28 யூனிட்களிலும் வாட்டர் பிளாண்ட் உள்ளதால், விரைவில் குடிநீர் பாட்டில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.1லிட்டர்,அரை லிட்டர் அளவில் ஆவின் தண்ணீர் பாட்டில் தயாரிக்கப்படும்

வருவாயை அதிகரிக்க பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை வெளியிடுவது குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என கூறினார்.

மேலும் செய்திகள்