< Back
மாநில செய்திகள்
ஆழ்துளை கிணறு அமைக்க பூமிபூஜை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஆழ்துளை கிணறு அமைக்க பூமிபூஜை

தினத்தந்தி
|
20 Aug 2022 5:26 PM GMT

கிருஷ்ணகிரி அருகே ஆழ்துளை கிணறு அமைக்க பூமிபூஜை நடந்தது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள பையனப்பள்ளி அம்மன் நகரில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் போதிய அளவிற்கு குடிநீர் வினியோகம் இல்லை, எனவே புதிய ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அம்மன் நகரில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கியது. கிருஷ்ணகிரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ. அசோக்குமார் பூமி பூஜை செய்து ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். புதிய ஆழ்துளை கிணறு அமைத்து, அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி வீடுகளுக்கு குழாய் அமைத்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், ஊராட்சி தலைவர் அமீர்ஜான், துணைத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதி மாதன், மாவட்ட கவுன்சிலர் ஜெயாஆஜி, கிளை செயலாளர்கள் நடுபையன், சின்னராஜி, ஒன்றிய துணை செயலாளர் சரவணன், ரமேஷ், தாபா வெங்கட்ராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்