< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம் கண்காட்சியில் ரூ.6 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

ராமநாதபுரம் கண்காட்சியில் ரூ.6 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

தினத்தந்தி
|
21 Feb 2023 6:45 PM GMT

ராமநாதபுரம் கண்காட்சியில் ரூ.6 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கண்காட்சியில் ரூ.6 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

ரூ.6 ேகாடிக்கு புத்தகங்கள் விற்பனை

ராமநாதபுரத்தில் கடந்த 12 நாட்களாக நடைபெற்ற புத்தக கண்காட்சி நிறைவுவிழா கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கலெக்டர் பேசியதாவது:-

இந்த புத்தக கண்காட்சியில் 1 லட்சத்து 44 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகள், 3 ஆயிரம் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் 73 ஆயிரம் பொதுமக்கள் உள்பட மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் கலந்து கொண்டு பார்வையிட்டு உள்ளனர். 12 நாட்களில் 2 லட்சத்து 48 ஆயிரம் புத்தகங்கள் ரூ.6 கோடியே 20 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பாரம்பரிய உணவு பொருள்கள் ரூ.13 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலை துறையின் மூலம் ரூ.3 லட்சத்திற்கு மரக்கன்றுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.6 கோடியே 36 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் பஸ்சில் நடமாடும் நூலகம் வடிவமைக்கப்பட்டு 10 ஆயிரம் புத்தகங்களுடன் கிராமங்கள் தோறும் சென்றது. புத்தக கண்காட்சியில் தினமும் அறிவு சார்ந்த கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டன. கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்டு 5,273 புத்தகங்கள் சிறை கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 12 ஆயிரம் புத்தகங்கள் நூலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாராட்டு சான்று

கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு சான்று வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், பயிற்சி சப்-கலெக்டர் நாராயண சர்மா, மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஷ் சுதாகர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உன்னிகிருஷ்ணன், ராமநாதபுரம் சமஸ்தானம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, ராமநாதபுரம் நகர் மன்றதலைவர் கார்மேகம், கலை இலக்கிய ஆர்வலர் சங்க தலைவர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, செயலாளர் வான்தமிழ் இளம்பரிதி, முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, ஆர்.டி.ஓ. கோபு, நேர்முக உதவியாளர் ஷேக் மன்சூர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்