< Back
மாநில செய்திகள்
அறிவுப் புரட்சிக்கு புத்தகங்களே ஆயுதம் - உலக புத்தக தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
மாநில செய்திகள்

அறிவுப் புரட்சிக்கு புத்தகங்களே ஆயுதம் - உலக புத்தக தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்

தினத்தந்தி
|
23 April 2023 11:58 AM IST

அறிவுப் புரட்சிக்கு புத்தகங்களே ஆயுதம் என்று உலக புத்தக தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

அறிவுப் புரட்சிக்கு புத்தகங்களே ஆயுதம் என்று உலக புத்தக தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர், "நல்ல புத்தகங்கள் நல்ல தோழன்! ஒரு புத்தகத்தை நாம் படிக்கத் தொடங்கும்போது, அது நம்முடன் உரையாடத் தொடங்குகிறது. நாம் அறியாத உலகத்தைக் காட்டுகிறது. அறிவூட்டுகிறது! நம்மை பண்படுத்துகிறது!

அதனால்தான், புத்தகங்களைப் பரிமாறிக்கொள்வைதை ஓர் இயக்கமாகத் தி.மு.க.வினர் முன்னெடுக்கிறோம். புத்தக வாசிப்பைப் பரவலாக்கும் வகையில், நமது அரசு மாவட்டங்கள்தோறும் புத்தகக் காட்சிகளை நடத்துவதுடன், நூலகங்களுக்கும் புத்துயிர் அளித்துள்ளது. அறிவுப் புரட்சிக்கு புத்தகங்களே ஆயுதம்!" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்