< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தூத்துக்குடி- தாம்பரம் சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை தொடக்கம்
|8 July 2023 7:15 PM IST
தூத்துக்குடி- தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயிலின் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
சென்னை,
தூத்துக்குடி பனிமய மாதா கோவில் தங்கத்தேர் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. தூத்துக்குடி- தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயிலின் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு ரெயில் புறப்படுகிறது. அதேபோல், தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு ஆகஸ்ட் 6ம் தேதி இரவு 9.45 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரெயிலானது கூடுதலாக அரியலூரில் நின்றுசெல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.