< Back
மாநில செய்திகள்
சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
மாநில செய்திகள்

சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தினத்தந்தி
|
1 March 2024 10:47 AM IST

தலைமைச் செயலகம் முழுவதும் உள்ள முக்கிய அறைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை,

தமிழக அரசின் தலைமைச் செயலகம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்படுகிறது. இச்செயலகத்தில்தான் தமிழக அரசின் செயல்பாடுகள் தொடங்குகின்றன.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலை 7.30 மணிக்கு தனியார் தொலைக்காட்சிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் அழைப்பால் மோப்ப நாய்களை கொண்டு தலைமைச் செயலகம் முழுவதும் உள்ள முக்கிய அறைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்