< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
|5 July 2024 8:49 PM IST
வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய தீவிர சோதனையில் மிரட்டல் செய்தி புரளி என தெரியவந்துள்ளது.
சென்னை,
சென்னை தி.நகரில் உள்ள பா..ஜனதா தலைமை அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து பா.ஜனதா அலுவலகத்தில் வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.
சோதனையில் அவை புரளி என தெரியவந்தது. இது குறித்து மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தியதில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் வேலூர் மாவட்டத்தில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.