< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை மாங்காடு அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
|1 March 2024 2:41 PM IST
மோப்பநாய் உதவியுடன் பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.
சென்னை,
சென்னை, மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி அலுவலக இ-மெயிலுக்கு பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக ஆவடி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து பள்ளிக்கு விரைந்து வந்த வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் பள்ளியில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மோப்பநாய் உதவியுடன் பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.