< Back
மாநில செய்திகள்
2 பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
மாநில செய்திகள்

2 பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

தினத்தந்தி
|
4 March 2024 9:45 AM IST

மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்று 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் இன்று 2 பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் மிரட்டல் வந்துள்ளது.

சென்னை மாங்காடு அருகே கெருகம்பாக்கம் தனியார் பள்ளி மற்றும் கோவை வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளிக்கு இ மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு இரு பள்ளிகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்