< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஈரோடு பஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் தீவிர சோதனை
|11 March 2023 10:45 AM IST
ஈரோடு பஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம், மணிக்கூண்டு போன்ற ஈரோட்டின் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்ம நபர் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டியுள்ளார். உடனடியாக சென்னை போலீசார், ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம், மணிக்கூண்டு பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
மோப்ப நாய் உதவியுடனும், மெட்டல் டிடெக்டர் உதவியுடனும் பஸ் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் போது வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.