< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கொதிகலன் பழுது: வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
|18 Feb 2023 1:22 PM IST
கொதிகலன் பழுது காரணமாக வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் வடசென்னை அனல்மின் நிலையம்செயல்பட்டு வருகிறது. முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும், 2-வது நிலையில் உள்ள 2 அலகுகளில் தலா 600 வீதம் 1200 என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் அனல் மின் நிலைய 2-வது நிலையின் 1-வது அலகில் கொதிகலன் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.