ஹிஜாப் விவகாரம் சர்ச்சையான நிலையில் வேலூர் கோட்டை அகழியில் பெண் சடலம் - போலீசார் விசாரணை
|வேலூர் கோட்டை அகழியில் பெண் பிணமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்,
வேலூர் கோட்டை யில் கடந்த வாரம் காதல் ஜோடியிடம் சிலர் அத் துமீறி மிரட்டல் விடுத்து பேசும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் கோட்டையில் கண்காணிப்பு கேமரா, புறக்கா வல் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வேலூர் கோட்டை அகழியில் நேற்று காலை 9 மணி யளவில் படகு சவாரி நடைபெறும் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் மிதப்பதாக வேலூர் வடக்கு போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அகழியில் மிதந்த பெண்ணின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். போலீசார் பிரேத பரிசோதனைக் காக உடலை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? சமீபத்தில் காணாமல் போன பெண்களின் விவரங்கள் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.