< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் புகழ்பெற்ற கோவில் குளத்தில் மிதந்த பெண் சடலம்
|28 Nov 2022 3:10 PM IST
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குளத்தில் பெண்ணின் சடலம் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை,
சென்னையில் உள்ள புகழ்பெற்ற பார்த்தசாரதி கோவிலில் பெண்ணின் சடலம் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தெப்பக்குளத்தில், அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், பெண்ணின் சடலத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பார்த்தசாரதி கோவில் குளத்தில் இறந்து கிடந்த பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.