< Back
மாநில செய்திகள்
தலையில் காயங்களுடன் வாலிபர் பிணம்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

தலையில் காயங்களுடன் வாலிபர் பிணம்

தினத்தந்தி
|
8 Oct 2023 1:01 AM IST

பனப்பாக்கம் அருகே தலையில் காயங்களுடன் வாலிபர் பிணமாக கிடந்தார்.

நெமிலி

பனப்பாக்கம் அருகே நெடும்புலி பகுதியில் உள்ள மயானம் அருகே வாலிபர் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்த நபர் காவேரிப்பாக்கம் மேட்டு தெருவை சேர்ந்த நந்தகுமார் (வயது 25) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தகுமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்