< Back
மாநில செய்திகள்
சிங்கப்பெருமாள் கோவில் அருகே மரத்தில் தொங்கிய நிலையில் வாலிபர் பிணம் மீட்பு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

சிங்கப்பெருமாள் கோவில் அருகே மரத்தில் தொங்கிய நிலையில் வாலிபர் பிணம் மீட்பு

தினத்தந்தி
|
20 July 2023 3:20 PM IST

சிங்கப்பெருமாள் கோவில் அருகே மரத்தில் தொங்கிய நிலையில் வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்.

தூக்கில் தொங்கிய நிலையில்

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே தென்மேல்பாக்கம் வனப்பகுதியில் ஒரு மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆபரேட்டர்

இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நபர் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட செங்குன்றம் நரசிங்கபுரம் காலனி பகுதியை சேர்ந்த மதியழகன் (வயது 32) என்பதும் இவர் சிங்கப்பெருமாள் கோவில் அருகே மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் கம்பெனியில் எந்திர ஆபரேட்டராக வேலை செய்தார் என்பதும் தெரியவந்தது.

இவர் குடும்பப் பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அடித்து கொலை செய்து மரத்தில் தூக்கு மாட்டி விட்டார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தென்மேல்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்