< Back
மாநில செய்திகள்
மறைமலைநகர் அருகே மாயமான 8-ம் வகுப்பு மாணவர் பிணமாக மீட்பு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மறைமலைநகர் அருகே மாயமான 8-ம் வகுப்பு மாணவர் பிணமாக மீட்பு

தினத்தந்தி
|
7 July 2022 2:46 PM IST

மறைமலைநகர் அருகே மாயமான 8-ம் வகுப்பு மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கீழக்கரணை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் திலீபன் (வயது 13), இவர் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 3-ந்தேதி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த திலீபன் திடீரென மாயமானார்.

இது குறித்து அவரது தந்தை ஆனந்தன் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீபனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கீழக்கரணை அருகே செங்குன்றம் ஏரியில் ஒரு சிறுவனின் உடல் மிதப்பதாக அப்பகுதி மக்கள் மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது ஏரியில் மூழ்கி இறந்து கிடந்த சிறுவன் காணாமல் போன திலீபன் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து திலீபனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்