< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
போடி அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் திறப்பு
|28 Aug 2022 7:43 PM IST
போடி அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது
போடி அருகே முந்தல் சாலையில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு ரூ.1½ கோடி மதிப்பில் 24 படுக்கை வசதிகளுடன் கூடிய நவீன வசதி கொண்ட கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். பின்னர் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் போடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ரவீந்திரநாத், தேனி தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன், நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி, கவுன்சிலர் சங்கர் மற்றும் டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.