< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
போடி பாலமுருகன் கோவிலில் கார்த்திகை தீபத் திருநாள் சிறப்பு வழிபாடு
|7 Dec 2022 12:15 AM IST
போடி பாலமுருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாள் சிறப்பு வழிபாடு நடந்தது.
போடி பரமசிவம் கோவில் கிரிவலப் பாதையில் உள்ள பாலமுருகன் கோவிலில் கார்த்திகை தீபத் திருநாள் சிறப்பு வழிபாடு நடந்தது. தேனி மாவட்ட சிவசேனா கட்சி சார்பிலும், பக்தர்கள் சார்பிலும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தலைமை அர்ச்சகர் ஸ்ரீஅபிஜித் நம்பூதிரி தலைமையில் இந்த சிறப்பு வழிபாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், சிவசேனா கட்சி மாநில செயலாளர் குருஅய்யப்பன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.