< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள்
|10 Dec 2022 12:15 AM IST
சீர்காழி அருகே மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரையில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
சீர்காழி:
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயலின் காரணமாக சீர்காழி அருகே தெடுவாய், மடவாய் மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று 4-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. புயல் காரணமாக கடலோர பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.கொண்டல், ஆதமங்கலம், பெருமங்கலம், வள்ளுவக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முன்னதாக நடவு செய்யப்பட்டு தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சம்பா நெற்பயிர்கள் மழையால் சாய்ந்துள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் வாழ்வாதாரம் மீண்டும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என கவலை அடைந்துள்ளனர். இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.