< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு கோவளத்தில் களைகட்டிய படகுப் போட்டி
|26 March 2023 4:21 PM IST
இறுதிப்போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னை,
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று கோவளம் கடற்கரையில் மாபெரும் படகுப்போட்டி நடைபெற்றது.
காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடு செய்துள்ள இந்த படகுப்போட்டியில் 20 மீனவ கிராமங்களை சேர்ந்த 160 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
படகுப்போட்டியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். கரைக்கு திரும்பும் போட்டியாளர்கள் அனைவருக்கும் ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படகுப்போட்டியில் போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதன் இறுதிப்போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.