< Back
மாநில செய்திகள்
பேட்டராயசாமி கோவில் தெப்ப உற்சவம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

பேட்டராயசாமி கோவில் தெப்ப உற்சவம்

தினத்தந்தி
|
8 March 2023 6:45 PM GMT

தேன்கனிக்கோட்டையில் பேட்டராயசாமி கோவில் தெப்ப உற்சவம் நடந்தது.

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டையில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ சவுந்தர்யவல்லி சமேத பேட்டராய சாமி கோவில் தெப்ப உற்சவ திருவிழா நடைபெற்றது. முன்னதாக கோவிலில் இருந்து தேன்கனிக்கோட்டையில் உள்ள பெரிய ஏரிக்கு சவுந்தர்யவல்லி அம்பாள் மற்றும் பேட்டராயசாமி ஆகிய சாமிகள் கொண்டு சென்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சாமிகளை வைத்து ஏரியில் தெப்பம் உற்சவ விழா நடத்தப்பட்டது. இந்த தெப்பம் பெரிய ஏரியில் 4 முறை சுற்றி வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்