< Back
மாநில செய்திகள்
லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் தெப்ப உற்சவம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் தெப்ப உற்சவம்

தினத்தந்தி
|
7 Feb 2023 6:45 PM GMT

தேன்கனிக்கோட்டையில் லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் தெப்ப உற்சவம் நடந்தது.

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டையில் உள்ள லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் தெப்ப உற்சவம் மற்றும் பவுர்ணமி கிரிவல விழா நடந்தது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிேஷகம், பூஜை, மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் பழையபேட்டை மாரியம்மன் கோவில் அருகே உள்ள தெப்ப மண்டபத்தில் தெப்ப உற்சவம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்