கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூரில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம்
|திருக்கோவிலூரில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
திருக்கோவிலூர்,
விழுப்புரம் மத்திய மாவட்ட பா.ம.க.பொதுக்குழு கூட்டம் திருக்கோவிலூர் ஆஸ்பத்திரி ரோட்டில் உள்ள லட்சுமி ஸ்ரீ பாலாஜி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் பால.சக்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தங்க.ஜோதி, பொருளாளர் மாலதி, துணை செயலாளர்கள் சுவிஜி.சரவண்ணகுமார், வக்கீல் தேசிங்குராஜா, மாவட்ட அமைப்பு செயலாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில தேர்தல் பணி குழு தலைவர் எம்.அன்பழகன் கலந்து கொண்டு பேசினார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், மணிகண்டன், ஞானவேல், டெல்லி சேகர், சங்கர்கணேஷ், வக்கீல்கள் முத்துக்குமார், திருச்செல்வம், சிவராமன், குமரேசன், சுரேஷ், விழுப்புரம் நகர செயலாளர்கள் பெருமாள், போஜராஜன், வன்னியர் மாவட்ட சங்க செயலாளர் குமரகுருபரன், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் தமிழழகன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமர் ராயர், நகர தலைவர் முருகன், மாவட்ட துணை தலைவர் ஆனந்தன், இளைஞர் சங்க தலைவர் மாணிக்கவேல், விளந்தை ஊராட்சி மன்ற தலைவர் பூமாஅய்யனார், மாவட்ட நிர்வாகிகள் கே.எஸ்.வேலு, பரந்தாமன் மூர்த்தி, சண்முகம் ராஜூவேல், நாகராஜ், ஊடகப்பேரவை சூர்யா, ஒன்றிய தலைவர் விக்னேஷ், மாவட்ட மாணவர் சங்கம் மணிகண்டன், இளைஞர் சங்கம் அமுது உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருக்கோவிலூர் நகர செயலாளர் கேபிள் சரவணன் நன்றி கூறினார்.