< Back
மாநில செய்திகள்
பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
4 Aug 2023 4:03 PM IST

பொன்னேரியில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பொன்னேரி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 2019-ம் ஆண்டு ரூ.54 கோடியே 78 லட்சத்தில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக 41 கிலோ மீட்டர் நீளத்திற்கு 150-க்கும் மேற்பட்ட தெருக்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்து 4 வருடமாக ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருவதால் மழைக்காலங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறுகிறது. எனவே சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் முதல் அனைத்து தர வாகன ஓட்டிகளும் அவதியடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க கோரி திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பொன்னேரி அண்ணா சாலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பா.ம.க. மாவட்ட செயலாளர் விஎம்.பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் துலுக்கானம், மோகன், அரவிந்த், சமூக நீதிப் பேரவை மாநில நிர்வாகி மாசிலாமணி, இளைஞர் அணி நிர்வாகிகள் சுதாகர், ரவி உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்