< Back
மாநில செய்திகள்
பொன்னேரி அரசு கல்லூரி முன்பு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பொன்னேரி அரசு கல்லூரி முன்பு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
27 Jun 2023 6:59 PM IST

பொன்னேரி அரசு கல்லூரி முன்பு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில் அரசு விதிமுறைகளை மீறி மாணவர் சேர்க்கை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் மாணவர் சங்கத்தினர் சார்பில் அரசு கலைக் கல்லூரி முறையாக இட ஒதுக்கீட்டினை பின்பற்றி மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என கோரி கல்லூரி முன்பு அர்ப்பாட்டம் செய்தனர். இந்த போராட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவர்கள் சங்க செயலாளர் சந்திரன் முன்னிலை வகித்தார். இதில் மாநில சமூக நீதிப் பேரவை துணைச் செயலாளர் மாசிலாமணி, ஒன்றிய செயலாளர்கள் சசிகுமார், கார்த்திகேயன், எழிலரசன், இளைஞரணி செயலாளர் அன்பழகன் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்லூரி முதல்வரை சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியின் மாணவர் சங்கத்தின் சார்பில் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்