< Back
மாநில செய்திகள்
அலங்காநல்லூரில் பா.ம.க.வினர் மறியல்
மதுரை
மாநில செய்திகள்

அலங்காநல்லூரில் பா.ம.க.வினர் மறியல்

தினத்தந்தி
|
29 July 2023 2:15 AM IST

அலங்காநல்லூரில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

அலங்காநல்லூர்

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் ஒன்றிய தலைவர் விஜயகுமார், செயலாளர் செந்தில்குமார், கிளைச் செயலாளர் நாராயணன், கிளை தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலையில் கேட்டுகடையில் சாலை மறியல் நடந்தது. பின்னர் மறியல் நடந்த இடத்திற்கு வந்த அலங்காநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலமுத்து மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்