< Back
மாநில செய்திகள்
பா.ம.க- விடுதலை சிறுத்தைகள் வாக்குவாதம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

பா.ம.க- விடுதலை சிறுத்தைகள் வாக்குவாதம்

தினத்தந்தி
|
16 Jan 2023 6:45 PM GMT

பா.ம.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு தெரிவித்ததால் வானூர் அருகே ஓமந்தூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

வானூர்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஓமந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்ராஜ் (வயது 25). இவர் கடந்த உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அசோக்ராஜ் பா.ம.க.வில் இணைந்தார்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அசோக்ராஜ் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜெயராஜ் கலந்துகொண்டார்.

வாக்குவாதம்

இதற்கு அப்பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கு ஏற்கனவே பா.ம.க, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இடையே பிரச்சினை உள்ளதால், இங்கு நிகழ்ச்சி நடத்தவேண்டாம் என்று அவர்கள் கூறினர். இதனால் பா.ம.க.- விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

இதுபற்றி அறிந்த கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இரு கட்சியினரையும் அழைத்து பேசி சமரசம் செய்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்