< Back
மாநில செய்திகள்
தமிழகத்தை மிரட்டும் ப்ளூ காய்ச்சல்... கடலூரில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்
மாநில செய்திகள்

தமிழகத்தை மிரட்டும் ப்ளூ காய்ச்சல்... கடலூரில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்

தினத்தந்தி
|
20 Sept 2022 12:32 AM IST

கடலூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிக்கப்பட்ட ஏராளமான குழந்தைகளுடன் பெற்றோர் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

கடலூர்,

கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் குழந்தைகளுக்கு அதி வேகமாக காய்ச்சல் பரவி வருகிறது. இதன் காரணமாக கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் பாதித்த குழந்தைகளின் கூட்டம் அலைமோதுகிறது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்து மருத்துவரை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இதே போல் சிகிச்சைக்காக மக்கள் அதிக அளவில் வருகின்றனர்.

கிராமப்புறங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி, காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்