< Back
மாநில செய்திகள்
விளைஞ்ச தாய்யி வயித்துக்குள்ள வெடிய வச்சி தகர்க்கவா... பள்ளி மாணவியின் சிலிர்க்க வைக்கும் காந்த குரல்
மாநில செய்திகள்

"விளைஞ்ச தாய்யி வயித்துக்குள்ள வெடிய வச்சி தகர்க்கவா..." பள்ளி மாணவியின் சிலிர்க்க வைக்கும் காந்த குரல்

தினத்தந்தி
|
25 Dec 2022 4:45 PM IST

தஞ்சை அரசுப்பள்ளி மாணவி தனது கிராமத்து காந்த குரலால் அனைவரையும் நெகிழச் செய்துள்ளார்.

சென்னை,

உலகில் உள்ள கோடிக்கணக்கான உயிரினங்களின் ஒன்றுதான் மனித இனம். ஆனால் தனது ஆதிக்கத்தால் பிற உயிர்களின் பாதையில் பயணித்து பலன் அடைந்து வருகிறான் மனிதன். இது பலமில்லை, பலவீனம் என்று அவ்வப்போது மனிதனுக்கு இயற்கை உணர்த்தி வருகின்றது.

எத்தனை முறை இயற்கை பாடம் கற்பித்தாலும், மறதி எனும் குணத்தால் மறக்கும் மனிதனுக்கும் அறிதினும், அரிதான இதே மானுடப் பிறப்பில் பிறந்த சில இயற்கை ஆர்வலர்கள் பல வழிகளில் நினைவுப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தஞ்சையை சேர்ந்த பள்ளி மாணவி கனிமொழி கிராமத்து பாட்டால் பாடம் கற்பித்தது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. வல்லம் அரசு மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி கனிமொழி, பாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்துள்ளார்.

அதனை அறிந்த பள்ளியின் தமிழ் ஆசிரியர், விழிப்புணர்வு, விவசாயம் சார்ந்த பாடல்களை எழுதிக் கொடுத்து மாணவியை ஊக்குவந்து வந்தார். இந்த நிலையில் "விளைந்த தாய்யி வயித்துக்குள்ள வெடிய வச்சி தகர்க்கவா"... என தனது காந்த குரலால் மாணவி கனிமொழி பாடிய பாடல், இயற்கையின் இன்றைய நிலையை உணர்த்தி அனைவரையும் சிலிர்க்க வைத்துள்ளது.



மேலும் செய்திகள்