< Back
மாநில செய்திகள்
ரத்ததான முகாம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

ரத்ததான முகாம்

தினத்தந்தி
|
18 Jun 2023 12:28 AM IST

நாங்குநேரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

நாங்குநேரி:

நாங்குநேரி சுங்கச்சாவடியில் உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு, ரத்ததான முகாம் நடந்தது. கன்னியாகுமரி சுங்கச்சாவடி நிர்வாகிகள், தேசிய நெடுஞ்சாலைத்துறை நாகர்கோவில் திட்ட இயக்குனர் அலுவலகத்தினர் இணைந்து நடத்திய முகாமில், நாங்குநேரி சுங்கச்சாவடியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ரத்ததானம் வழங்கினர். நெல்லை அரசு மருத்துவ கல்லூரி ரத்த வங்கி அலுவலர்கள் ரத்தம் சேகரித்தனர்.

ரத்ததானம் வழங்கியவர்களுக்கு நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி சான்றிதழ் வழங்கினார். முகாமில் நாகர்கோவில் மேலாளர் ஜெபராஜ், சாலைப்புதூர் மேலாளர் சிவகுமார், எட்டூர் வட்டம் மேலாளர் பிரவீன்ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாங்குநேரி சுங்கச்சாவடி மேலாளர் ரவி பாபு மற்றும் கியூப் ரூட்ஸ் நிறுவனத்தினர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்