< Back
மாநில செய்திகள்
ரத்ததான முகாம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

ரத்ததான முகாம்

தினத்தந்தி
|
2 Oct 2023 12:30 AM IST

கோவில்பட்டியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

கோவில்பட்டி (கிழக்கு):

விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. பகத்சிங் ரத்ததான கழக ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் க.தமிழரசன், தொழிலதிபர் அபிராமி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ் முகாமை தொடங்கி வைத்தார். கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ரத்ததானம் செய்தவர்களை வாழ்த்தி பேசினார். கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையின் மருத்துவர் வெங்கடேஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ரத்தம் சேகரித்தனர்.

டாக்டர்கள் வெங்கடேஷ், பூவேஸ்வரி, கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர் வக்கீல் பெஞ்சமின் பிராங்களின், மாமன்னன் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம் செல்லத்துரை என்ற செல்வம், தமிழ்நாடு காமராஜ் பேரவை நாஞ்சில் குமார், மக்கள் நீதி மய்யம் ராதாகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் முருகன், ரத்ததான கழக செயலாளர் சண்முகராஜ், பொருளாளர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்