நாகப்பட்டினம்
ரத்ததான முகாம்
|வேதாரண்யத்தில் ரத்ததான முகாம் நடந்தது.
முன்னாள் எம்.பி. பி.வி. ராஜேந்திரன் பிறந்தநாளையொட்டி நாகை மாவட்ட அரசு ஆஸ்பத்திரியும், காங்கிரஸ் கட்சியினரும் இணைந்து ரத்ததான முகாமை வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் நடத்தின. முகாமை பி.வி.ஆர். விவேக் தொடங்கி வைத்தார். முகாமிற்கு வேதாரண்யம் உப்பு உற்பத்தியாளர்கள் வியாபாரி சங்க தலைவர் கயிலை மணிவேதரத்தினம் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் போஸ் வரவேற்றார்
முகாமில் பேரூராட்சி முன்னாள் தலைவர் சங்கரவடிவேல், நகர காங்கிரஸ் தலைவர் அர்ஜுனன், முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் வைரம், சமூக ஆர்வலரும்- நகைக்கடை உரிமையாளருமான விஜயபாலன் உள்ளிட்ட ஒன்றிய, நகர, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். டாக்டர் தனஞ்ஜெயன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்களிடம் ரத்தம் பெறப்பட்டு நாகை மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக பி.வி.ராஜேந்திரன் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டப்பட்டது. தொடர்ந்து உப்பு சத்தியாகிரக நினைவு கட்டடத்தில் உள்ள சுதந்திரப்போராட்ட தியாகிகள் சர்தார் வேதரத்தனம், வைரப்பன் உள்ளிட்ட சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு தோப்புதுறை, அகஸ்தியன்பள்ளியில் இனிப்புகளும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. அகத்தியர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.