< Back
மாநில செய்திகள்
காலை சிற்றுண்டி திட்டத்தை நிறைவேற்றக்கோரி ரத்த கையெழுத்து
கரூர்
மாநில செய்திகள்

காலை சிற்றுண்டி திட்டத்தை நிறைவேற்றக்கோரி ரத்த கையெழுத்து

தினத்தந்தி
|
17 Aug 2023 11:40 PM IST

காலை சிற்றுண்டி திட்டத்தை நிறைவேற்றக்கோரி ரத்த கையெழுத்து நடைபெற்றது.

10 ஆண்டு பணி முடித்த சத்துணவு ஊழியர்களை அனைத்துத்துறை காலிபணியிடங்களிலும் நிரப்பி வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்றிட வேண்டும்.

காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.6,750 வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தாந்தோணி ஒன்றியம் மற்றும் கரூர் மாநகராட்சி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ரத்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் சுந்தரம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் விஜயகுமார் சிறப்புரை ஆற்றினார். இதில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சடையாண்டி, மாவட்ட பொருளாளர் கமலக்கன்னி, மாவட்ட இணை செயலாளர் சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்