சிவகங்கை
ரத்த தான முகாம்
|சிங்கம்புணரியில் ரத்த தான முகாம் நடந்தது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் கூட்டுறவுத்துறை அமைச்சரும் மாவட்ட கழகச் செயலாளருமான அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் உத்தரவுக்கு இணங்க கருணாநிதியின் நூற்றாண்டு விழா மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்த தான முகாம் சிங்கம்புணரி அண்ணா மன்றத்தில் நடைபெற்றது. முகாமிற்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து, நகரச்செயலாளர் கதிர்வேல், நகர அவைத்தலைவர் சிவக்குமார், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் இந்தியன் செந்தில் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர் நபீஷாபானு மற்றும் சிவகங்கை ரத்த வங்கி மருத்துவ அலுவலர்கள் குழு முன்னிலையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
ரத்தம் வழங்கிய அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் சிவபுரிசேகர், நகர துணைச் செயலாளர் அலாவுதீன், மாவட்ட பிரதிநிதிகள் செல்வகுமார், தனுஷ்கோடி, பூமிநாதன் பிரதிநிதி குடோன்மணி, புகழேந்தி, நகர இளைஞரணி அருண் பிரசாத் ஒன்றிய இளைஞர் அணி மனோகரன், மருத்துவர் அருள்மணி நாகராஜன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கதிர்காமம், தொழில் நுட்ப பிரிவு சையது, அழகு ராஜு, பொன் சரவணன், பரிச்சி சரவணன், அமுதன், மதன்குமார், சேவுகமூர்த்தி, சுதாகர், சஞ்சய்போஸ், கிருங்கை பிரதாப், தொண்டரணி துரைசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.