< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
ரத்த தான முகாம்
|1 Oct 2023 12:15 AM IST
திருமருகலில் ரத்த தான முகாம் நடந்தது.
திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பேரிடர் காலத்தில் ரத்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் ஆஸ்பத்திரி ரத்த வங்கி இணைந்து ரத்ததான முகாமை நடத்தியது. முகாமிற்கு ரத்த வங்கி உதவி பேராசிரியர் டாக்டர் பாலமுருகன் தலைமை தாங்கினார். டாக்டர் பாஸ்கரன், மாவட்ட நல கல்வியாளர் மணவாளன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் செவிலியர் கீர்த்தனா மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், உதவி செவிலியர்கள் கலந்து கொண்டனர். முகாமில் 33 பேர் ரத்த தானம் செய்தனர். முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.