< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
ரத்த தான முகாம்
|2 Sept 2023 7:21 PM IST
தெள்ளாரில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
வந்தவாசி
வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் உள்ள சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம், செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி, தெள்ளார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை சார்பில் நடைபெற்ற முகாமுக்கு கல்லூரி தலைவர் டி.கே.பி.மணி தலைமை தாங்கினார்.
கல்லூரி முதல்வர் ஆர்.ஹரிஹரன் வரவேற்றார்.
தெள்ளார் வட்டார மருத்துவ அலுவலர் ஹித்தேன்ஷா ரத்த வங்கி மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் மாணவர்கள், ஆசிரியர்களிடமிருந்து ரத்தத்தை தானமாக பெற்றனர்.
முகாமில், 55 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. மேலும் ரத்த தானம் அளித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் சுகாதார ஆய்வாளர்கள் கோதண்டராமன், பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.