ராமநாதபுரம்
ரத்த தான முகாம்
|ராமநாதபுரம் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
ராமநாதபுரம் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. மண்டபம் அரசு மருத்துவமனையில் நடந்த முகாமிற்கு மாவட்ட தலைவர் இப்ராஹிம் சாபிர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கரீம் ஹக் சாஹிப், மாவட்ட துணைத்தலைவர் யாசர்அரபாத், மாவட்ட துணைச்செயலாளர்கள் சீனிரஜப்தீன், மீரான், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் நசுருதீன் மற்றும் மண்டபம் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட பேச்சாளர் அமீனுல்லா, மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதாபானு ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் 25 பேர் ரத்த தானம் செய்தனர். ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவக்குழுவினர் ரத்த தானத்தை பெற்றுக் கொண்டனர். இதேபோல பெரியபட்டினம் கிளை சார்பில் பெரியபட்டினம் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமை கீழக்கரை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சேகு ஜலாலுதீன் தொடங்கி வைத்தார். மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பெரியபட்டினம் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் 20 பேர் ரத்ததானம் செய்தனர்.