< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
ரத்த தான முகாம்
|20 Aug 2023 12:15 AM IST
ராமநாதபுரத்தில் ரத்த தான முகாம் நடந்தது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மருத்துவ சேவை அணி சார்பில் ரத்த தான முகாம் முகமது யாசிர் தலைமையில் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சுல்தான், துணை செயலாளர்கள் மன்சூர் அலி, ஜகாங்கீர் அலி, யாசர் அரபாத், பிரசார பேரவை ரகுமத்துல்லா, தொண்டரணி அபூபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவ கல்லூரி டாக்டர்கள் மனோஜ்குமார், மைதீன் பிச்சை ஆகியோர் ரத்த தான முகாமை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் அன்வர் அலி, தொண்டரணி பொருளாளர் அகமது இப்ராகிம், ராமேசுவரம் முருகவேல், பெரிய முகல்லா ஜமாத் தலைவர் ஹாரூண் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.