< Back
மாநில செய்திகள்
பா.ஜ.க.வினர் ரத்ததானம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

பா.ஜ.க.வினர் ரத்ததானம்

தினத்தந்தி
|
19 Sept 2023 12:15 AM IST

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி பா.ஜ.க.வினர் ரத்ததானம் செய்தனர்.

திருக்கோவிலூர்

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் வி.ஏ.டி.கலிவரதன் தலைமையில் திருக்கோவிலூர் அருகே உள்ள மணம்பூண்டியில் உள்ள திருமண மண்டபத்தில் பா.ஜ.க.வினர் 73 பேர் ரத்ததானம் செய்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன் 73 பெண்களுக்கு சேலைகளையும், ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கினார். இதைத் தொடா்ந்து திருக்கோவிலூர் பஸ் நிலையம் எதிரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் வி.ஏ.டி.கலிவரதன் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தரவு மேலாண்மை பிரிவு செயலாளர் தொழிலதிபர் ஆர்.கார்த்திகேயன், விழுப்புரம் தெற்கு மாவட்ட துணை தலைவர் வக்கீல் ஜே.வசந்தன், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், நகர தலைவர் பத்ரி நாராயணன், பொதுச்செயலாளர்கள் முரளி, சதாசிவம், தங்கம், புவனேஸ்வரி, சங்கர், சரண்யா, குபேரன், பரணிசுப்பிரமணியன், வெங்கடேசன், ஏழுமலை, அலமேலு, சதீஷ்குமார், சங்கர், செல்வகுமார், அரிகிருஷ்ணன், ரவிச்சந்திரன், வெங்கடேசன், ராஜீவ்காந்தி, விஸ்வநாதன், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்