< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
வேளாண் கல்லூரி மாணவர்கள் ரத்ததானம்
|4 Dec 2022 12:15 AM IST
வேளாண் கல்லூரி மாணவர்கள் ரத்ததானம் அளித்தனர்.
காரைக்குடி,
காரைக்குடி அருகே விசாலயங்கோட்டை கலாம் கவி கிராமத்தில் உள்ள சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சேர்மன் டாக்டர் சேது குமணன் தலைமை தாங்கினார். இந்த ரத்ததான முகாமில் வேளாண்மை கல்லூரி மாணவர்கள், உதவி பேராசிரியர்கள், தேசிய மாணவர் படையினர், அலுவலக பணியாளர்கள் 37 பேர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.
தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சிவதானு, டாக்டர் ராஜ்குமார் நர்சுகள், தொழில் நுட்ப பணியாளர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் பெற்று அரசு ரத்த வங்கியில் சேர்த்தனர். முகாமிற்க்கான ஏற்பாடுகளை வேளாண் கல்லூரி இயக்குனர் கோபால், உதவி பேராசிரியர் டாக்டர் கவியரசு ஆகியோர் செய்திருந்தினர்.