< Back
மாநில செய்திகள்
நீலகிரி
மாநில செய்திகள்
ரத்ததான முகாம்
|28 Sept 2023 2:00 AM IST
நெலாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் நடந்தது.
பந்தலூர்
பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மருத்துவ அலுவலர் யோகேஸ்வரன் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம், ஒருங்கிணைப்பாளர்கள் ரவீந்திரன், அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். இதில் 10 பேர் ரத்ததானம் செய்தனர். கூடலூர் அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கி மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு ரத்தம் சேகரித்தனர். பெறப்பட்ட ரத்தம் கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டது. தொடர்ந்து ரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.