< Back
மாநில செய்திகள்
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

தினத்தந்தி
|
21 Feb 2023 2:09 PM IST

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வாலிபர்கள் திடீரென பெரியபாளையத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சியை சேர்ந்த அம்பேத்கர் நகர் பகுதியில் சாலை, மின்விளக்கு வசதி சரி இல்லை, குடிநீர் மேல்நிலைத்தொட்டி பழுதடைந்து உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அந்த பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் திடீரென பெரியபாளையத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். மனுவை பெற்று கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலக நிதி அல்லது ஊராட்சி மன்ற நிதி ஆகியவற்றில் இருந்து தேவையான அனைத்து வசதிகளையும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செய்து தருவதாக உறுதி அளித்தார். இதன் பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் இந்த பகுதியில் பதற்றமும், பரபரப்பும் நிலவியது.

மேலும் செய்திகள்