< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் முற்றுகை
|23 Jun 2023 1:41 AM IST
கெங்கவல்லி பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்
கெங்கவல்லி:-
கெங்கவல்லி பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் தாமரைச்செல்வியை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 4 மணி நேரம் வேலை ஒதுக்காமல், 6 மணி நேரம் வேலை தருகிறார்கள். மேலும் முழு ஊதியத்தையும் தராமல் குறைந்த அளவு ஊதியம் தருகிறார்கள். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இனி 4 மணி நேரம் மட்டுமே வேலை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன்பிறகு மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர்.