< Back
மாநில செய்திகள்
கண்ணை கட்டி சிலம்பம் ஆடிய மாணவர்கள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

கண்ணை கட்டி சிலம்பம் ஆடிய மாணவர்கள்

தினத்தந்தி
|
23 July 2022 11:55 PM IST

சாயல்குடியில் 2½ மணி நேரம் கண்களை கட்டி 150 மாணவ-மாணவிகள் சிலம்பம் சுற்றி சாதனை புரிந்தனர்.

சாயல்குடி,

சாயல்குடியில் 2½ மணி நேரம் கண்களை கட்டி 150 மாணவ-மாணவிகள் சிலம்பம் சுற்றி சாதனை புரிந்தனர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சாயல்குடி ஜமீன்தார் சிவஞான பாண்டியன் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் திருமாறன், சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், பா.ஜ.க கடலாடி வடக்கு ஒன்றிய தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்

Related Tags :
மேலும் செய்திகள்