< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
விழுப்புரம் கண்டம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு - ஒருவர் படுகாயம்
|1 Oct 2023 5:14 PM IST
கண்டம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் கண்டம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாராயணசாமி என்ற நபர் முன்விரோதம் காரணமாக பரணிதரன் என்ற நபர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த பரணிதரன் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய நாராயணசாமி என்ற நபர் தப்பிச் சென்ற நிலையில், போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.