< Back
மாநில செய்திகள்
வேடசந்தூர் அருகே  கல்குவாரியில் வெடி விபத்து:  2 பேர்  உயிரிழப்பு
மாநில செய்திகள்

வேடசந்தூர் அருகே கல்குவாரியில் வெடி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
14 Sept 2023 2:35 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கல்குவாரியில் வெடி விபத்து ஏற்பட்டதில் 2 பேர் பலியாகினர். இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர். பாறைகளை உடைக்க வைக்கப்பட்ட வெடி, எதிர்பாராத விதமாக வெடித்ததில் நாராயணன், மேத்யூ ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.

வெடி விபத்தில் சுந்தரபுரியை சேர்ந்த கோபால், மாரியப்பன் ஆகிய இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த இருவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்குவாரியில் வெடி விபத்து ஏற்பட்டு இரண்டு பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்