< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்: நத்தம் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 2 பேர் உயிரிழப்பு
மாநில செய்திகள்

திண்டுக்கல்: நத்தம் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 2 பேர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
25 Aug 2024 8:57 AM IST

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று அதிகாலை வெடிவிபத்து ஏற்பட்டது.

நத்தம்,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று அதிகாலை வெடிவிபத்து ஏற்பட்டது.

பூலா மலை அடிவாரத்தில் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிவகாசி தொழிலாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் சிதறி உயிரிழந்தவர்களின் அடையாளம் காணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஆவிச்சிபட்டியை சேர்ந்த பட்டாசு ஆலை உரிமையாளர் செல்வம் தலைமறைவாகி உள்ளநிலையில், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்